என்னையும் என் நேசத்தையும் மதித்து தன் உணர்வுகளை, வாழ்வின் நிகழ்வுகளை வாழ்ந்தநாள் முழுதும் என்னுடன் பகிர்ந்து, என்னைப்பக்குவப்படுத்தி, பாசத்தின், உடன்பிறப்பாய் பிறந்ததின் -- வலிமையையும், முழுப்பரிமாணத்தையும உணர்த்திய 'என் இரண்டாம் தாய்' ராதாவிற்கு இவை சமர்ப்பணம்.
எங்கள் உயிரிலே கலந்த
உன்னுருவை
என்று யாம் காண்போம்
உயிரே ராதா
உன்னுருவிலிருந்து பிரிந்த உயிர்
உன்னுடையதல்ல
அது எங்கள் உயிர்
உயிரற்ற மாமிசமலைகள் நாங்கள்
உன்பிரிவை தாங்கும் இடிதாங்கிகள்
இந்த இடிதாங்கிகள் இனி வாழ்நாள்
முழுதும் சுமக்கப்போகும் சோகமூட்டைகளின்
எடையை ஏன் எண்ணிப் பார்க்காமல்
ஏமாற்றிச் சென்றாய் எங்களை விட்டு!
- சுசீலா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment