அன்பெனும் பாசக்கூட்டில்
அதிசய அம்மாவின் அரவணைப்பில்
பிறந்து வளர்ந்த பாசப்பறவைகள் நான்கு.
சிறகு முளைத்து தனித்தனி கூடு தேடிச்
சென்றாலும் , பாசமெனும் வலைபின்னி
அதில் மகிழ்ந்தன.
அண்டமெல்லாம் சுற்றினாலும்
அம்மாவின் அரவணைப்புக்காக
ஆண்டுதோறும் வந்திடும்
எங்கள் அக்கா பறவை.
இந்த ஆண்டும் அப்படி வந்திட்ட
அந்த நேசமிகு பறவை
தொலைந்த தன்சிறகைத் தேடி
எங்கோ சென்றது.
திரும்பி வரவேயில்லை. கண்டீரோ அதை ?
- சுசீலா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment