Sunday, December 6, 2009

சமர்ப்பணம்

அன்பும், அறிவும், அழகும்
கொடுத்த ஆண்டவன்
அக்கா உங்களின் ஆயுளை
நீட்டிக்க மறந்ததேன்
மரணத்தின் வலி எங்களில்
மறக்க முடியாததாய் ஆகட்டும்
பொருளையும், மனிதர்களையும்
சொந்தம் கொண்டாடியது போகட்டும்
பற்றும் பயமும் எங்களை விட்டு அழியட்டும்
பக்தியே வாழ்வின்
பரிமாணமாகட்டும்

- உமா

1 comment:

  1. உள்ளத்தில் தோன்றி உடல்வழி வெளிப்பட்ட அன்பு, இனி மனம் வழி மட்டும் உறவாடுவதும் பகிர்ந்துணர்வதும் உங்கள் இழப்பின் வலியினைக் குறைத்திடக் கூடும்.. வார்த்தைகள் பலவீணமாகும் நேரங்களில், அன்பு கண்ணீராய் வெளிப்படுவது இயற்கை.. இன்று இந்த மீளாத்துயர் தரும் மௌனவெளியில், உங்கள் கண்ணீர் அவர்களின் இருப்பை நிரந்தரமாக்கும், உங்கள் வாழ்வெங்கும்..

    ReplyDelete